நுழைவாசல் | ஆலய வரலாறு | படத்தொகுப்பு | அறிவிப்புகள் | தொடர்புகளுக்கு
      நுழைவாசல்
      ஆலய வரலாறு
      படத்தொகுப்பு
      விரதங்கள்
      விருந்தினர் பதிவு
      விருந்தினர் பக்கம்
      அமைவிடம்
      பக்தி பாடல்கள்
      முக்கிய தலங்கள்
      பெரியார்கள்
      ஒளிபடத்தொகுப்பு
      அறிவிப்புகள்
 
 

     
 
அருள்மிகு ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையார் ஆலய வரலாறு
நாடெல்லாம் ஆலயம் அமைத்து, ஆன்மீக வாழ்விற்கு வழிகாட்டிச் சிறப்புடன் வாழ்ந்தனர் எம் ழுன்னொர். அவர்கள் எமக்கென விட்டுச் சென்ற பழம்பெரும் பாரம்பரியங்களை அருமையாக பேணிப் பொழிவுறத் காப்பது எம் தலையாய கடனம அன்றோ! இவ்வுணர்வினையே மாககவி பாரதியாரும் தம் பாடல் ஒன்றில்!

“எந்தையும் தாயும் பிறந்து, வளர்ந்து இருந்தது இந்த நாடே அவர் முந்தையராயிரம் அண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்தநாடே அவர் சிந்தனையில் ஆயிரம் எண்ணமிளிhந்து சிறந்தும் இந்தநாடே அதைவந்தனை மனதிலிருந்தி என் வாயுற வாழ்த்தேனோ இதை வந்தேமாதரம், வந்தேமாதரம் என வாழ்த்தி வணங்கேனோ”
என எடுத்தி;யம்பியமை எம் உள்ளத்தை உருவாக்கின்றது.

எம் கிராமத்தின் கண், நடுநாயகமாய் எழுந்தருளிய அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையார் ஆலயழும் பழமை-பெருமை-புதுமைக்குரியது. இன்று அதன் புனித மாக கும்பாபிஷேகப் பெருவிழா கோலாகலமாக நடைபெறுகின்றது. இந் நு}ற்றாண்டில் இப் புண்ணிய நிகழ்வு நான்காவது முறையாக நிகழ்கின்றது. முன்னைய விழாக்கள் முறைறே 1932, 1951, 1951 ஆகிய ஆண்டுகளிள் இனிதே நிகழ்ந்தன.

எம் மானிலத்தின் தொண்மையான 12சைவ ஆலயங்களில் இதுவுமொன்றெனத் தரமான வரலாற்று நு}ல்கள் சான்று பகருகின்றன. இதன் ஸ்தாபிதம் 16ஆம் நு}ற்றாணடின் பிற்பகுதியில் அல்லது 17ஆம் நு}ற்றாணடின் முற்பகுதியில் அமையப்பட்டதென அறியப்படுகின்றது. மேலும் 1792 இல் அன்றைய அரசரின் ஆலயப் பதிவேட்டில் இவ்வாலயம் விபரங்களும் உள்ளன, எது எவ்வாறாக மிகத் தொன்மைமிக்கது: அற்புதமானது: அடியவர்களுக்கெலாம் கண்கண்ட தெய்வமாய், அன்னவர் குறைகளைந்;து அருள் சுரக்கும் ‘ கற்பகம் “ ஆனது.

ஆலயத்தின் திருமஞ்சன் தீhத்தம் தான்தோன்றியானது. ஆவ்விசேடத்தை விளக்கும் வகையிலேயே பிள்ளையாரி;ன் திருவுருவம் ஏழுந்தருளப்பட்டதாகும், தீர்த்தக்கிணற்றின் அமைப்பு, உருவம், ஆழம், நீரின் புனிதம் ஆகியவற்றினை பார்போர் சுவைப்போர் வியந்தே நிற்பர்.

தமிழ் மன்னன் பரராசசேகரன் மைத்துனன்-மன்னன் பண்டாரத்தின் முதன் மந்திரி அரசகேசரிக்கும் இவ்வாலயத்திற்கும் ஏதோ ஒருவiயில் இறுகிய தொடர்பின் காரணமாகவே இதனை ‘ ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையார் “ என அழைக்கப்பெற்றதென ஒரு கர்ணபரம்பரைக் கதையுமுண்டு.

ஆலய பரிபாலனம் அதன் அரம்;பம் முதல் 1879 வரை வழிபாடற்றியோராலும் 1880 - 1893 வரை அமரர் ஸ்ரீ மான் கதிர்காமர் ஐயம்பிள்ளையென்ற சிவபுண்ணிய சீலராலும்,1894 - 1903 வரை அக்கால ஆலயக் குருவினாலும், 1904 -1906 வரை ‘ அப்பாசாமிக்குரு “ என மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஆலயக்குரு, சிவஸ்ரீ சுவாமிநாத - இராமசாமிக்குருக்களாலும் பல்வேறு இடர்கள், தளர்வுகள் மத்தியிலும் பரிபாலிக்கப்பட்டு குருக்கள் அவர்கள் 1947இல் அமரரானதும் ஆலயப ;பொறுப்பினை 1949இல் சட்டப10ர்வமாக அமைக்கப்பட்ட அறங்காவல் சபையினரிடம் ஒப்படைக்கபெற்று அன்று முதல் இன்றுவரை காலத்திற்குக் காலம் தெரிவு செய்யப்படும் பரிபாலன சபையினர் ஆலயத்தின் பரிணாம வளர்ச்சியில் அதன் பழமைகுன்றாது பல, பல, புனித, புதிய பணிகளை சிறப்புடன் ஆக்கி வருவதை பலருமறிவர்.

சைவ ஆலயங்களில் நிகழும் சகல சிறப்பு விழாக்களுடன், வருடாந்த உற்சவம் ஆண்டுதோறும் ஆவணிச் சதுர்த்தியன்று கொடியேற்ற விழாவுடன் ஆரம்பமாகி பத்து தினங்கள் பெருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று பௌர்ணமி தினத்தில் தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெறும். ஆலயப் பிரதம சிவாச்சாரியாராக சிவஸ்ரீ கார்ததிகேய சாம்பசதாசிவக் குருக்களும் அவரின் புத்திரர் சிவஸ்ரீ சோமதேவக் குருக்களும் தம் தந்தையாருக்குத் துணையாயுமிருந்து தம் அரனார் தொண்டினைப் பக்தி சிரத்தையுடன் ஆற்றி வருகின்றனர்.

இவ் அறப்பணிக்கு அடியார் திருக்கூட்டமும் கொடை வள்ளல்களும் மூலவேராக அமைத்து, காலந்தோறும் கண் துஞ்சாது கருமமே கண்ணாய் நின்று கணபதிக்கன்பு செய்து தொண்டாற்றிய வண்ணமிருக்கின்றனர்.

இவ்வேளை, சீலமிகு சீர்த் திருத்தெர்டாற்றி இறைபதமடைந்த இனியவர்களையும் நாம் நன்றி உணர்வுடன் நினைவு கொள்வோமாக. விநாயகர் திருத்தொண்டில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த முனனைய முகாமையாளர்கள், அறங்காவல் உறுப்பினர்கள் அவர் தம் பணிகளை உளமார வாழ்த்திப் போற்றும் வேளை அலயத்தின் பாரிய பணிகளில் அவற்றையெலாம் அசுர வேகத்தில் நீதி, நிதானம் தவறாது தன் அபார ஆளுமையுடன் 1959 இல் கோபுர மண்டபமைத்தும், தென்னிந்திய சிற்பாசாரிகளைக கொண்டு வியப்புமிகு சித்திரத் தேரினை 1967 இல் உருவாக்கியும், நந்தவனமமைத்து பழைய வாகனங்களைப் புதிக்கியும், புதியன பல ஆக்கியும், மேலும் ஆலயத் தேர்மண்டபம் போன்ற பல தரப்பட்ட பணிகளை எவரும் ஏவாவன்ணம் உழைத்து இவற்றிற்கெல்லாம் வேண்டிய நீதியினைப் பெ இந்திய முன்னனிப் பாடகர்களை அழைத்து இலங்கையின் பல பாகங்களில் இன்னினச நிகழ்வுகள் நடத்தி நிதி திரட்டியும் பக்தகோடிகளின் அன்பளிப்புடனும் குறிப்பாக கொனட வள்ளல் மலாயன் பென்சர் அமரர் ஸ்ரீமான் காசிப்பிள்ளை செல்லையாவினது பாரிய நிதி உதவியுடனும் சித்திர வேனலப்பாடுகளுடன் கூடிய பிள்ளையாரின் இரதத்தை பலரும் வியக்கும் வகையில் அமைக்க உழைத்த அமரர் கனகசபாபதி வேலுப்பிள்ளை கனகரத்தினம், சமாதானநீதிவான், போன்றவர்களின் தொண்னை எம் சமூகம் என்றுமே போற்றக் கடைப்பாடுடையது.

ஆனமையில் 1992 இல் முருகப்பெருமானுக்கும் இரதமொன்றினை அடியவர் பொருளுதவியுடன் தன் முழு நேரத்னதயும் அர்ப்பணித்து முடித்த பெருமைக்குரிய, அறங்காவல் சபையின் செயலாளர் அமரர் வேலுப்பிள்ளை சின்னத்தம்பியின் தொண்டினையும் நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.

ஆலயம் அருள் பொழிய, அடியவா ;பால் அனுக்கிரகிக்க முப்பொதும் திருமேனி தீண்டி, நித்திய நைமித்திய தொண்டினைப் பக்தர்கள் பரவசமடையுமாறு தொண்டாற்றும் அந்தனப் பெரியோர்களையும் காலை, மாலை, உச்சிதோறும் தம்மை மறந்து தொண்டாற்றும் பக்தர்களையும், கரம் கூப்பி வணங்குவோமாக.


நன்றி -
இராமலிங்கம் சுவாமிகள்

« முன்னைய பக்கம்

 
 
 
நுழைவாசல் | ஆலய வரலாறு | படத்தொகுப்பு | அறிவிப்புகள் | தொடர்புகளுக்கு
காப்புரிமை © நீர்வேலி மக்கள்.       arasakesaripillayar@gmail.com