நாடெல்லாம் ஆலயம் அமைத்து, ஆன்மீக வாழ்விற்கு வழிகாட்டிச் சிறப்புடன் வாழ்ந்தனர் எம் ழுன்னொர். அவர்கள் எமக்கென விட்டுச் சென்ற பழம்பெரும் பாரம்பரியங்களை அருமையாக பேணிப் பொழிவுறத் காப்பது எம் தலையாய கடனம அன்றோ! இவ்வுணர்வினையே மாககவி பாரதியாரும் தம் பாடல் ஒன்றில்!
“எந்தையும் தாயும் பிறந்து, வளர்ந்து இருந்தது இந்த நாடே அவர் முந்தையராயிரம் அண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்தநாடே அவர் சிந்தனையில் ஆயிரம் எண்ணமிளிhந்து சிறந்தும் இந்தநாடே அதைவந்தனை மனதிலிருந்தி என் வாயுற வாழ்த்தேனோ இதை வந்தேமாதரம், வந்தேமாதரம் என வாழ்த்தி வணங்கேனோ”
என எடுத்தி;யம்பியமை எம் உள்ளத்தை உருவாக்கின்றது.
எம் கிராமத்தின் கண், நடுநாயகமாய் எழுந்தருளிய அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையார் ஆலயழும் பழமை-பெருமை-புதுமைக்குரியது. இன்று அதன் புனித மாக கும்பாபிஷேகப் பெருவிழா கோலாகலமாக நடைபெறுகின்றது. இந் நு}ற்றாண்டில் இப் புண்ணிய நிகழ்வு நான்காவது முறையாக நிகழ்கின்றது. முன்னைய விழாக்கள் முறைறே 1932, 1951, 1951 ஆகிய ஆண்டுகளிள் இனிதே நிகழ்ந்தன.
எம் மானிலத்தின் தொண்மையான 12சைவ ஆலயங்களில் இதுவுமொன்றெனத் தரமான வரலாற்று நு}ல்கள் சான்று பகருகின்றன. இதன் ஸ்தாபிதம் 16ஆம் நு}ற்றாணடின் பிற்பகுதியில் அல்லது 17ஆம் நு}ற்றாணடின் முற்பகுதியில் அமையப்பட்டதென அறியப்படுகின்றது. மேலும் 1792 இல் அன்றைய அரசரின் ஆலயப் பதிவேட்டில் இவ்வாலயம் விபரங்களும் உள்ளன, எது எவ்வாறாக மிகத் தொன்மைமிக்கது: அற்புதமானது: அடியவர்களுக்கெலாம் கண்கண்ட தெய்வமாய், அன்னவர் குறைகளைந்;து அருள் சுரக்கும் ‘ கற்பகம் “ ஆனது.
நீர்வேலிக் கிராமத்திதன் நடுநாயகமாகவிளங்கி அருள்பாலித்துக் கொண்டிருப்பதே அரசகேசரிப் பிள்ளையார் ஆலயமாகும். செம்மண் பிரதேசத்தில் அமைந்தால் இவ்வாலயத்தைச் செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் என்றும் வழங்குவதுண்டு.
யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்து வந்த தமிழ் அரசர்கள் நல்லூரில் இராசதானி அமைத்ததோடு நல்லூரில்லிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பலபாகங்களுக்கும் போக்குவரத்து செய்வதற்கான வீதிகளையும் அமைத்தனர்.
அரோகரா ஒலி வானைப் பிளக்க வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசகேசரிப் பிள்ளையாரின் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது. சிவஸ்ரீ சா. சோமதேவக் குருக்கள் இறையாசியூடன் கொடியை ஏற்றினார். 20 இற்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து சிறப்பித்தனர். கொடியேற்ற நிகழ்வில் ஏறத்தாழ ஆயிரம் வரையான அடியவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
காலை 11. 45 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது. கொடியேற்றத் திருவிழா தொடர்பாக வசந்த மண்டப எழுந்தருளிப் பிள்ளையார்இ முருகன் ஆகியோருக்கு விசேட சாத்துப்படி அலங்காரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கொடியேற்ற நிகழ்வூகளைத் தொடர்ந்து பஞ்சமுக விநாயகர் கோவிலில் எழுந்தருளியமையைக் குறிக்குமுகமான நிகழ்வூகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வூகள் சிவஸ்ரீ சோ.சிவஜெயக் குருக்கள் (தேவர் ஐயாவின் மகன்) தலைமையில் இடம்பெற்றன.
ஆலயத்தில் இவ்வருடப் பெருந்திருவிழாவை முன்னிட்டு வழமைபோல தினமும் மதியம் அன்னதான நிகழ்வூ ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. வெளிவீதியூலா இரவில் நிகழ்கின்றமையால் புதிய மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு வெளிவீதி ஒளி வெள்ளமாக இரவில் காட்சி தருகின்றது.
கோவிலின் அருகில் இருக்கும் ஸ்ரீ கணேச சனசமூக நிலைய மண்டபமும் புதிதாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. இச்சனசமூக நிலையம் 1949 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. அடுத்த மாதம் 60 ஆவது ஆண்டு விழா (மணி விழா) நிகழ்வூகள் இடம்பெறவூள்ளன.
கோவிலின் தீர்த்தத் தடாகமும் புனரமைக்கப்பட்டுள்ளது. நீர்த்தாங்கி பொருத்துதல் குழாய் நீர் விநியோகம் ஆகிய பணிகளும் இடம்பெறுவதாக பரிபாலன சபைப் பொருளாளர் திரு ச.க. முருகையா தெரிவித்தார்.
கொடியேற்றம் தொடர்பான படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
தகவல்
நீர்வைக் கிழார்
வரலாற்றுச் சிறப்பு மிக்க நீர்வேலி ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையார் கோவிலின் வருடாந்தப் பெருந்திருவிழாவில் தேர்த்திருவிழா கடந்த 03.09.2009 வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. வசந்த மண்டபப் ப10சையைத் தொடர்ந்து பஞ்சமுக விநாயகரும் வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானும் தேரில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள்பாலித்தனர். விநாயகருக்குரிய சித்திரத் தேரும் முருகப் பெருமானுக்குரிய சித்திரத் தேரும் காலை 8.45 மணிக்குத் தமது திருவுலாவை ஆரம்பித்துக் காலை 9.45 மணிக்கு இருப்பிடத்தை வந்தடைந்தன.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு உதயன் பத்திரிகையில் இரண்டு பக்கச் சிறப்பு மலர் வெளிவந்தது. ஆலயக் குருக்கள் தேவர் ஐயா நீர்வை மணி ஐயா, வலி.கிழக்குப் பிரதேச சபைச் செயலாளர் ச.நடராசா, சிவத்தமிழ்ச் சொல்லழகர் ச.லலீசன், ஆலயப் பரிபாலன சபையினர் அகியோரின் செய்திகளும் ஆலய வரலாறு தொடர்பான குறிப்புரையும் நீர்வை முருகதாசனின் கவிதையும் மலரை அலங்கரித்தன. நீர்வேலியின் பிரபல வர்த்தகர்கள் மலர் வெளியீட்டுக்கு அனுசரணை வழங்கியிருந்தனர்.
மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழா இடம்பெற்றது. தீர்த்தத் திருவிழாவில் இம்முறை புதிய சாத்துப்படி மேற்கொள்ளப்பட்டது. பிள்ளையார் முருகன் ஆகியோர் புதிதாக நாகசடப் பின்னணியில் அமைந்த ஆசனத்தில் அமர்ந்து வீதியுலா வந்தனர். இரவு கொடியிறக்கம் இடம்பெற்றது. இத்திருவிழாக்கள் யாவற்றிலும் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் பங்குபற்றினர்.
சனிக்கிழமை (05.09.2009) ப10ங்காவனத் திருவிழா இடம்பெற்றது. எளிமையாகவும் பக்தி ப10ர்வமாகவும் சுவாமிக்கான பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனை அடுத்து தனிப்பட்ட உபய நிகழ்வாக (திரு. செல்வம்) அமுதசுரபிக் கலாமன்றத்தின் பட்டிமண்டப நிகழ்வும், நல்லூர் ராகம்ஸ் இசைக்குழுவின் ராஜராகங்கள் இசை நிகழ்ச்சியும் அதிகாலை வரை இடம்பெற்றன.
தகவல்:
நீர்வைக் கிழார்
(சப்பரம், தேர், தீர்த்தம் தொடர்பான முக்கிய படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)